தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காவலர் லஞ்சம் கேட்டதால் தற்கொலைக்கு முயன்ற இளைஞர் - The youth attempted suicide as the guard demanded a bribe

திருப்பூர்: சரக்கு வாகனம் ஓட்டி வந்த இளைஞரிடம் காவலர் லஞ்சம் கேட்டதால் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காவலர் லஞ்சம் கேட்டதால் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்
காவலர் லஞ்சம் கேட்டதால் டீசல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்ற இளைஞர்

By

Published : Dec 17, 2019, 6:46 PM IST

மதுரை மாவட்டம் கோவில்பட்டியைச் சேர்ந்தவர் அர்ஜுன். இவர் தனது மனைவி பிரியாவுடன் திருப்பூரில் உள்ள கூலிபாளையம் பகுதியில் வசித்து வருகிறார். சரக்கு வாகன ஓட்டுநரான இவர் சர்க்கார் பெரியபாளையத்திலிருந்து அவரது வாகனத்தில் சரக்குகளை ஏற்றிக்கொண்டு திருப்பூர் நோக்கி சென்றுகொண்டிருந்தார்.

கூலிபாளையம் நால்ரோடு சோதனைச்சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த காவலர்கள், அர்ஜுனனின் வாகனத்தை நிறுத்தி ஆவணங்களைக் கேட்டுள்ளனர்.

அர்ஜுனன் அனைத்து ஆவணங்களையும் காவலர்களிடம் கொடுத்துள்ளார். அனைத்து ஆவணங்களும் சரியாக இருந்தும் காவலர்கள் அர்ஜுனிடம் 200 ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளனர்.

அர்ஜுனன் தரமறுத்ததால் காவலர்கள் அவரை தரக்குறைவாக பேசியுள்ளனர். இதனால் மனஉளைச்சல் அடைந்த அர்ஜுனன் வாகனத்தில் இருந்த டீசலை தன்மேல் ஊற்றிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார்.

இதனைக் கண்ட பொதுமக்கள் காவலர்களுடன் கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த காங்கேயம் உதவி கண்காணிப்பாளர் செல்வம், ஊத்துக்குளி காவல் ஆய்வாளர் சுந்தரபாண்டி ஆகியோர் அர்ஜுனனை விசாரணைக்காக ஊத்துக்குளி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

லஞ்சம் கேட்ட காவலருக்கு எதிராக இளைஞர் டீசல் ஊற்றி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையும் படிங்க: பெண் அவமானப்படுத்தியதில் மனமுடைந்து தற்கொலைக்கு முயன்ற மீனவர்

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details