திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை(24). இவர் திருப்பூர் அய்யப்பம்பாளையம் பிரிவு அருகில் இறைச்சிக் கடையில் தங்கி வேலைபார்த்து வந்தார். நேற்றுமுன்தினம் இரவுவேலை முடிந்ததும், இறைச்சிக் கடையில் இறைச்சி வெட்ட பயன்படும் மரக்கட்டையை இயந்திரம் மூலம் சுத்தம் செய்தார். அப்போது எதிர்பாராவிதமாக கழுத்தில் அணந்திருந்த துணியின் நாடா இயந்திரத்தில் சிக்கியது.
இயந்திரத்தில் துணி சிக்கியதால் நிகழ்ந்த மரணம்; சிசிடிவி காட்சி! - துணி கழுத்தில் சிக்கி உயிரிழப்பு
திருப்பூர்: இயந்திரம் மூலம் இறைச்சி வெட்ட பயன்படுத்தப்படும் மரக்கட்டையை சுத்தம் செய்தபோது, கழுத்தில் அணிந்திருந்த துணியின் நாடா இயந்திரத்தில் சிக்கியதால் இளைஞர் உயிரிழந்தார்.
இதனால், கழுத்தில் சுற்றப்பட்டு இருந்த நாடா கழுத்தை இறுக்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிந்தார். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரூரல் காவல்துறையினர் ஏழுமலையின் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சம்பவ இடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க: சிறுத்தையின் பிடியில் நாய்: பகீர் கிளப்பும் சிசிடிவி காட்சி!