திருப்பூர் மாநகராட்சிக்கு உட்பட்ட 54ஆவது வார்டு வீரபாண்டி பகுதியில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் இருந்து வருகின்றன. இந்நிலையில் இங்கு 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட தார்ச் சாலைகள், பல்வேறு பகுதிகளில் பெயர்ந்து குண்டும் குழியுமாக காட்சி அளிக்கின்றன.
'சாலையைச் சரிசெய்யுங்க' - நாற்று நட்டுப் போராடிய கம்யூனிஸ்ட் கட்சியினர்! - திருப்பூர் கம்யூனிஸ்ட் கட்சியினர் போராட்டம்
திருப்பூர்: மாநகரப் பகுதிகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதைக் கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
http://10.10.50.85:6060///finalout4/tamil-nadu-nle/finalout/06-December-2019/5288217_ttt.mp4
மேலும் மழைக்காலங்களில் சேறும் சகதியுமாக காட்சி அளிப்பதாகவும், இதனால் வாகன ஓட்டிகள் மட்டும் அல்லாது சாலைகளில் நடந்து செல்பவர்களும் பாதிக்கப்படுவதாகக் கூறி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர், பொதுமக்கள் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.