திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அருகே அமைந்திருக்கும் பள்ளபாளையம் கிராமத்தில் புதியதாக பெருமாள் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இந்த கோயிலில் நிறுவப்படும் சாமி சிலைகள் இன்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
பக்தர்களுக்காக கோயிலை விட்டு வெளியே வந்த கடவுள்!
திருப்பூர்: உடுமலை அருகே புதிதாக கட்டப்படும் பெருமாள் கோயிலுக்கு கொண்டு வரப்பட்டுள்ள சிலைகளுக்கு, இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு பக்தர்கள் நேரடியாக தீர்த்தம் செலுத்தவதற்கு ஏதுவாக வெளியே வைக்கப்பட்டுள்ளன.
பக்தர்கள் தீர்த்தம் செலுத்த கோயில் சிலைகள் வெளியே வைப்பு
இதைத்தொடர்ந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அடுத்த 3 நாட்களுக்கு பக்தர்கள் சிலைகளுக்கு நேரிலே தீர்த்தம் செலுத்தலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக கோயிலுக்கு வெளியே சாமி சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.
இதையடுத்து வரும் ஜூன் 20ஆம் தேதி சிலைகளை கருவறைக்குள் வைக்கப்படவுள்ளது. மேலும், ஜூலை 6ஆம் தேதி கும்பாபிஷேகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.