காங்கேயம் திருப்பூர் சாலையில் சென்னியப்ப தியேட்டர் பஸ் நிறுத்தம் அருகே வணிகவரித் துறை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகம் முன்பு மரத்தின் அருகே ஒரு சிட்டுக்குருவி இறந்து கிடந்தது. இறந்த சிட்டுக்குருவியை தேடி அதன் இணை சிட்டுக்குருவியும், அந்த இடத்திற்கு வந்தது. தனது இணை சிட்டுக்குருவி இறந்ததுகூட தெரியாமல் எப்படியாவது அதன் உயிரை காப்பாற்றி விடலாம் என்று அந்த சிட்டுக்குருவி இரண்டு மணிநேரம் அதனை தன் அலகால் கொத்தி இழுப்பதும், புரட்டி போடுவதாகவும் போராடிய காட்சிகள் பார்ப்பவர்களை கலங்க வைத்தது.
இறந்த இணையை காப்பாற்ற சிட்டுக்குருவியின் பாச போராட்டம்! - இறந்த இணையை காப்பாற்ற போராடும் சிட்டுக்குருவி
திருப்பூர்: இறந்து போன தனது இணையை காப்பாற்ற சிட்டுக்குருவி நடத்திய பாச போராட்டம் காண்போரை நெகிழ்ச்சியடை வைத்தது.
![இறந்த இணையை காப்பாற்ற சிட்டுக்குருவியின் பாச போராட்டம்! சிட்டுக்குருவியின் பாசப்போராட்டம்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-7417310-thumbnail-3x2-tpr.jpg)
சிட்டுக்குருவியின் பாசப்போராட்டம்
இறந்த இணையை காப்பாற்ற போராடும் சிட்டுக்குருவி