தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த கடும் கட்டுப்பாடுகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் பெரிய கடைகள், வணிக வளாகங்கள், தியேட்டர்கள் உள்ளிட்டவைகள் கடந்த 26ஆம் தேதி முதல் மறு உத்தரவு வரும் வரையில் மூடவேண்டும் என அரசு உத்தரவிட்டது. அதன் அடிப்படையில் 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் உள்ள அடைக்கப்படாத கடைகளுக்கு சென்று எச்சரிகை கொடுத்து கடைகளை அடைத்தனர்.
விதியை மீறிய நகை கடைக்கு சீல் வைத்த நகராட்சி - corona lockdown
கோபிசெட்டிபாளையத்தில் அரசு உத்தரவை மீறி வெளியே கதவைப் பூட்டி உட்புறமாக நகை விற்பனை செய்த தங்க நகை கடையை நகராட்சியினர் சீல் வைத்து அடைத்தனர்.
இந்நிலையில் அரசின் உத்தரவை மதிக்காமலும், கரோனா நோய் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாமலும் திருப்பூர் மாவட்டம் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் செயல்படும் பிரபல தனியார் நகை கடை, முன்பக்க கதவை தாழிட்டு, அதிகளவு வாடிக்கையாளர்களை கடைக்குள் வைத்துக்கொண்டு குளிர்சாதனப் பெட்டியையும் பயன்படுத்தி வியாபாராத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையறிந்து அங்கு சென்ற கோபிசெட்டிபாளையம் வட்டாட்சியர், வருவாய் ஆய்வாளர், நகராட்சி அலுவலர்கள், காவல்துறையினர் நகைக்கடையின் கதவை திறந்து பார்த்தபோது அதிர்ச்சியடைந்தனர்.
கரோனா தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றாமல், கடைக்குள் முகக்கவசம் அணியாமல் 150க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களை கொண்டு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்ததால் கடையை பூட்டி சீல் வைத்தனர். இதனால் கோபிசெட்டிபாளையம் கச்சேரிமேடு பகுதியில் சிறிது பரபரப்பு ஏற்பட்டது. மேலும் நகராட்சி பகுதியில் 3 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் செயல்படும் கடைகளுக்கு வருவாய் துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.