தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

காதல் மனைவியை கொலை செய்து கணவர் தற்கொலை முயற்சி - undefined

திருப்பூர்: மனைவியை சரமாரியாக குத்தி கொலை செய்துவிட்டு கணவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நிசார்

By

Published : Nov 11, 2019, 8:29 AM IST

திருப்பூர் மாவட்ட ஊத்துக்குளி மேற்கு வீதியில் வசித்துவரும் அசினா (24), நிசார் (32) தம்பதி கடந்த மூன்று ஆண்டுகள் முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். அவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது. நிசார் தனது முதல் மனைவியை விட்டுப் பிரிந்திருந்த நிலையில், அசினாவை காதல் திருமணம் செய்துள்ளார்.

இதனிடையே அசினாவுக்கும் நிசாருக்கும் இடையே அவ்வப்போது சிறு சிறு பிரச்சனைகள் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில் வழக்கம்போல் நேற்றும் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதாகவும் அதன்பின் நீண்ட நேரமாகியும் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அசினாவின் பெற்றோர் தட்டியும் திறக்காததால் கதவை உடைத்து பார்த்தனர்.

அப்போது அசினா இறந்த நிலையிலும் நிசார் உயிருக்குப் போராடிக்கொண்டும் இருந்ததாகத் தெரிகிறது. பின் காவல் நிலையத்திற்கும் தகவல் கொடுத்துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர் இருவரையும் மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதனிடையே காவல் துறையினரின் விசாரணையில் நிசார் போதைக்கு அடிமையாகியதால் அடிக்கடி அசினாவை துன்புறுத்திவந்ததாகவும் அசினாவின் பெற்றோர் அடிக்கடி சமாதானம் செய்து சேர்த்துவைத்ததாகவும் கூறப்படுகிறது.

திருப்பூரில் கொலை

இச்சூழலில் இருவரிடையே ஏற்பட்ட பிரச்னையில், நிசார் கத்தியைக்கொண்டு அசினாவின் முகம், கை, முதுகு உள்ளிட்ட இடங்களில் குத்திக் கொலை செய்ததோடு, அதே கத்தியால் தனது கழுத்தை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாகவும் கூறப்படுகிறது. மேலும் நிசார் மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details