தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இன்ஸ்டாகிராம் மூலம் காதலனை கரம் பிடித்த சிறுமி... திடீர் தற்கொலை: கணவர் கைது! - போக்சோ

திருப்பூர் அருகே இன்ஸ்டாகிராம் மூலம் காதல் திருமணம் செய்து கொண்ட சிறுமி திடீரென தற்கொலை செய்து கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இன்ஸ்டாகிராம்
Instagram

By

Published : Aug 11, 2023, 11:00 AM IST

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் கருப்புசாமி நகரில் சிவகங்கையைச் சேர்ந்த சங்கர் (30) என்பவர், இன்ஸ்டாகிராமில் 16 வயது சிறுமியுடன் பழகி திருமணம் செய்து கொண்டு வசித்துள்ளார். இந்த நிலையில் திடீரென சிறுமி சடலமாக மீட்கப்பட்ட, காதல் கணவனை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கையைச் சேர்ந்தவர், சங்கர் (30). இவர் இன்ஸ்டாகிராமில் அதே ஊரைச் சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டதாகவும் நாளடைவில் இருவரும் தீவிரமாக காதலித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு சங்கர் தனது 16 வயது காதலியைத் திருமணம் செய்து கொண்டு திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே கணபதிபாளையம் கருப்புசாமி நகரிலுள்ள தன்ராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்துள்ளார்.

இதையும் படிங்க:நிலத்தை அபகரிக்க கூலிப்படை ஏவிய எஸ்ஐ: மோதலில் கண்ணை பறிகொடுத்த நபர்.. பின்னணி என்ன?

இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 09) அதிகாலை அந்த வீட்டின் கதவு திறந்து கிடக்க வீட்டினுள் 16 வயது சிறுமி தற்கொலை செய்த நிலையில் கிடந்துள்ளார். இதைக் கண்டு அப்பகுதியில் இருந்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் பல்லடம் போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர். அதன் பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சிறுமியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனக்கு திருப்பூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இச்சம்பவம் தொடர்பாக அப்பெண்ணின் கணவனான சங்கரை காவல் துறையினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அதில் சங்கர் இன்ஸ்டாகிராம் மூலமாக 16 வயதுடைய சிறுமியிடம் பழகி காதல் செய்து பின்னர் திருமணம் செய்துகொண்டு, திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் குடிபெயர்ந்துள்ளார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்த நிலையில், இருவருக்குமிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சிறுமி தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக சங்கரை பல்லடம் அனைத்து மகளிர் காவல் துறையினர் போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இதையும் படிங்க:மணப்பாறையில் பாஜகவினர் திடீர் சாலை மறியல்: 50க்கும் மேற்பட்டோர் கைது!

முன்னதாக, கடந்த மே மாதம் சென்னையைச் சேர்ந்த 13 வயது சிறுமியிடம் 17 வயது சிறுவன் இன்ஸ்டாகிராம் மூலம் பழகி, அந்த பெண்னை அவரது வீட்டிற்கு அழைத்து சென்றுள்ளார். பின்னர் அந்த சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனையடுத்து அந்த சிறுவன் மீது போக்சோ வழக்கின் கீழ் போலீசார் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளிக்கு அனுப்பி வைத்துள்ளனர். இது போன்று சமூக வலைதளங்கள் மூலம் பேசி சிறு குழந்தைகளை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்து வரும் சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவது பொதுமக்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:ஆம்பூரில் 15 லட்சம் மதிப்பிலான பேன்சி பொருட்கள் தீயில் எரிந்து சேதம்!

ABOUT THE AUTHOR

...view details