தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சவரத் தொழிலாளியை தாக்கிய திமுக மாவட்ட துணை செயலாளர்! - திருப்பூர் மாவட்ட செய்திகள்

திருப்பூர்: பல்லடம் பகுதியில் சவரத் தொழிலாளியை தாக்கிய திமுக மாவட்ட துணை செயலாளர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

the-dmk-district-secretary-who-attacked-the-shaving-worker
the-dmk-district-secretary-who-attacked-the-shaving-worker

By

Published : May 27, 2020, 7:06 PM IST

Updated : May 27, 2020, 10:16 PM IST

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஒன்றியத்திற்குள்பட்ட கணபதிபாளையம் ஊராட்சி தலைவராக இருப்பவர் நாகேஸ்வரி. இவரது கணவர் சோமசுந்தரம், திமுகவின் மாவட்ட துணை செயலாளராக உள்ளார்.

இந்நிலையில், மலையம்பாளையத்தைச் சேர்ந்த சவரத் தொழிலாளியான சிதம்பரம் (54) என்பவர், தனது சலூன் கடையை இரண்டு மாதங்களுக்குப் பின்னர் தற்போது திறந்துள்ளார். அப்போது, கடைக்கு முன்னர் இருந்த திமுகவினரின் பேனர், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு இடையூறாக உள்ளதாக அக்கட்சியினரிடம் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து, சிதம்பரத்தை வீட்டுக்கு வரும்படி சோமசுந்தரம் அழைத்துள்ளார். பின்னர் அங்கு சென்ற சிதம்பரத்தை, சோமசுந்தரம் மற்றும் அவரது ஆட்கள் கடுமையாகத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இதில் மயக்கமடைந்த அவரை, அவரது மகன் மகாலிங்கம் காப்பாற்றி, பல்லடம் அரசு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதையடுத்து, சிதம்பரம் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில், சோமசுந்தரத்தின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:சிறுமி பாலியல் வன்புணர்வு: மீன் வியாபாரி மீது பாய்ந்தது போக்சோ!

Last Updated : May 27, 2020, 10:16 PM IST

ABOUT THE AUTHOR

...view details