திருப்பூர் மாவட்டத்தில், திருப்பூர் தெற்கு, திருப்பூர் வடக்கு, பல்லடம், காங்கேயம், அவிநாசி ஆகிய தொகுதிகளில் போட்டியிடும் அமமுக, தேமுதிக வேட்பாளர்களை ஆதரித்து அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பரப்புரை மேற்கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், “ஆளுங்கட்சி கூட்டணியானது தொண்டர்கள், மக்களை நம்பவில்லை. மாறாக காந்தி தாத்தாவை (பணம்) தான் நம்பியுள்ளனர். அவர்கள் ஐம்பது கோடி முதலீடு செய்கிறார்கள் என்றால், அடுத்த ஐந்து வருடத்தில் ஐந்தாயிரம் கோடி எடுப்பார்கள். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆறு, குளங்களை தூர்வாருவதுபோல கஜானாவையும் தூர்வாரிவிட்டார்.
அதே போல், பலநாள் பட்டினி போல, திமுக காய்ந்த மாடு கம்பங்கொல்லைக்குள் புக இருப்பது போல் தயாராக உள்ளது. திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே எந்தக் கடையும் வைக்க முடியவில்லை. நாம் பெருச்சாளிகளை விரட்டுகிறோம் எனக் கூறி பேய்களை உள்ளே விட்டுவிடக் கூடாது. பணத்தின் மூலம் மக்களை விழவைத்து விடலாம் என ஆளும்கட்சி நினைக்கிறது. ஆனால், அவர்கள்தான் இந்தத் தேர்தலில் விழப்போகிறார்கள். ஆடு, மாடுகளை விலைக்கு வாங்குவது போல மக்களையும் வாங்க முடியும் எனும் எண்ணம் முறியடிக்கப்பட வேண்டும். இறுதியாக தீய, துரோக சக்திகளை விரட்டி அடிக்க வேண்டும்” என்றார்.
இதையும் படிங்க:பேசிப்பேசி தொண்டை வத்திப்போச்சு; புரிந்து கொள்ளுங்கள்; வேற வழியில்லை - எடப்பாடி பழனிசாமி