திருப்பூர்: விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் தேர்தல் பரப்புரையின் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் குமரலிங்கத்தில் திமுக மகளிரணி செயலாளர் கனிமொழி இன்று பரப்புரையைத் தொடங்கினார். இதைத்தொடர்ந்து அவர் கொழுமம் பகுதியில் உள்ள பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து அங்கும் பரப்புரை செய்தார்.
பின்னர் மாலையாண்டி பட்டிணத்தில் நெசவாளர்களுடனான கலந்தாய்வுக் கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார். அப்போது,"கைத்தறிக்கும் விசைத்தறிக்கும் வித்யாசம் தெரியாமல் ஜிஎஸ்டி விதிக்கப்பட்டுள்ளது, இதுகுறித்துப் பேசினால் மத்தியில் உள்ளவர்களுக்கு புரிந்து கொள்ளக்கூடிய திறன் இல்லை, இதுகுறித்துப் பேசவேண்டிய அரசு, ஜிஎஸ்டி குறித்து பேசினால் ஆட்சியைக் கலைத்துவிடுவார்கள் எனும் பயத்தில் இருக்கிறது" என்றார்.