தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பின்னலாடை தொழிலுக்கு எந்த சலுகையும் இல்லை: தொழில் துறையினர்!

திருப்பூர்: 2019-20ஆம் ஆண்டிற்கான பட்ஜெட்டில் பின்னலாடை தொழில் துறைக்கு எந்த சலுகைகளும் வழங்கப்படவில்லை, என திருப்பூர் தொழில் துறையினர் தெரிவித்துள்ளனர்.

textile industry

By

Published : Jul 5, 2019, 6:16 PM IST

மத்திய அரசின் 2019-20ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனால் தாக்கல் செய்யப்பட்டது.

இது குறித்து திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியிருப்பதாவது, தொழில் துறையினர் எதிர்பார்த்த ஜிஎஸ்டி வரி குறைப்பு குறித்து எவ்வித அறிவிப்பும் பட்ஜெட்டில் இடம் பெறாதது ஏமாற்றம் அளிக்கிறது. இதேபோல் திருப்பூர் பின்னலாடை துறையினர் பெரிதும் எதிர்பார்த்த சிறிய அளவில் செயல்படும் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட ஜிஎஸ்டி வரி ரத்து குறித்தோ அல்லது குறைப்பு குறித்தோ எவ்வித அறிவிப்பும் இல்லை என்று தெரிவித்தார்.

மேலும் திருப்பூர் பின்னலாடை துறை ஒரு லட்சம் கோடி இலக்கை எட்ட தேவையான எந்த அறிவிப்புகளும் இடம்பெறாதது ஏமாற்றமாக உள்ளதாகவும், சிறு, குறு தொழில்கள் மீண்டுவர திட்டங்கள் ஏதும் இல்லை என்றார். முன்பு 250 கோடி ரூபாய் வரை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரை வரி தள்ளுபடி இருந்தது. தற்போது 400 கோடி என மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல் சிறு, குறு நிறுவனங்கள் வளர எவ்வித அறிவிப்பும் இல்லை அதே நேரத்தில் தேசிய அளவில் அதிக வேலை வாய்ப்பை உருவாக்குவது டெக்ஸ்டைல்ஸ் துறை, ஆனால் இத்துறைக்கு மத்திய பட்ஜெட்டில் போதுமான முன்னுரிமை அளிக்கப்படவில்லை என்று வேதனை தெரிவித்தார்.

இதேபோல் தொழிலாளர்களுக்கான தங்கும் விடுதி வசதி, இஎஸ்ஐ மருத்துவமனை திறன் மேம்பாட்டு மையம் உள்ளிட்ட அடிப்படைத் தேவைகளும் இந்த பட்ஜெட்டில் இடம் பெறவில்லை என்று கூறினார். பின்னலாடை தொழில் துறைக்கு என்று எந்த ஒரு சலுகைகளும் வழங்கப்படவில்லை, தொழில்துறைக்கு சாதகமும் பாதகமும் இல்லை என்று தெரிவித்தார்.

ABOUT THE AUTHOR

...view details