தமிழ்நாடு

tamil nadu

By

Published : Feb 11, 2020, 1:49 PM IST

ETV Bharat / state

கல்விக்கடனுக்கு அதிக வட்டியுடன் கட்டணம் செலுத்த வற்புறுத்தும் வங்கி - இளம்பெண் ஆட்சியரிடம் புகார்

திருப்பூர்: கல்லூரி படிப்பிற்காக வாங்கிய கல்விக்கடனுக்கு அதிக வட்டியுடன் கட்டணம் செலுத்த வங்கி நிர்வாகம் வற்புறுத்துவதாக இளம்பெண் ஒருவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தார்.

collector office
ஆட்சியரிடம் புகார்

திருப்பூர் மாவட்டம் வாவிபாளையத்தைச் சேர்ந்த பிரபா, 2013ஆம் ஆண்டு 12ஆம் வகுப்பு தேர்வில் 1155 மதிப்பெண் எடுத்திருந்த நிலையில் குடும்ப வறுமை காரணமாக வங்கியில் கல்விக் கடனுக்காக விண்ணப்பித்து கல்லூரி படிப்பைத் தொடங்கியுள்ளார். இருப்பினும், முதல் இரண்டு ஆண்டுகளுக்கு கல்விக் கடன் கிடைக்காததால் வெளியில் வட்டிக்குப் பணம் வாங்கி கல்லூரி படிப்பைத் தொடர்ந்துள்ளார்.

இரண்டு ஆண்டு தொடர் போராட்டத்திற்குப் பின் மூன்றாம் ஆண்டு திருப்பூர் காமராஜர் சாலையில் உள்ள இந்தியன் வங்கி 2 லட்சத்து 69 ஆயிரம் ரூபாயை கல்விக்கடனாக பிரபாவிற்கு வழங்கியுள்ளது. ஆனால், கல்விக்கடன் பெற்றது முதல் மாதந்தோறும் அதற்கான வட்டியையும் வங்கிக்குச் செலுத்தி வந்துள்ளார். தற்போது சென்னையில் தங்கியிருந்து வேலை தேடிக் கொண்டிருக்கும் பிரபாவிடம் உடனடியாக 3 லட்சத்து 90 ஆயிரம் ரூபாயைக் கட்ட வேண்டும் என வங்கி நிர்வாகம் வற்புறுத்தியுள்ளது.

இளம்பெண் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

இதனால், மிகுந்த மன உளைச்சலுக்கான பிரபா கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டுமென்று பாதிக்கப்பட்ட மாணவி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகாரளித்தார்.

இதையும் படிங்க: நிலைமை மோசமாவதற்குள் இந்தியர்களைக் காப்பாற்றுங்கள் - ஜப்பான் கப்பலிலிருந்து தமிழர் கோரிக்கை!

For All Latest Updates

TAGGED:

ABOUT THE AUTHOR

...view details