திருப்பூர் மாவட்ட இடுவாய் பகுதியில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்துவருகின்றனர். இந்தப் பள்ளியில் மாணவர்களைக் கழிவறை சுத்தம்செய்ய வற்புறுத்தி தலைமையாசிரியை சாதியின் பெயரைச் சொல்லித் திட்டியதாகக் கடந்த டிசம்பர் மாதம் புகார் எழுந்தது.
இந்தப் புகாரின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். இதனையடுத்து, இந்த ஆய்வின் அடிப்படையில் பள்ளியின் தலைமையாசிரியை கீதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அவர் மீது வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது.