தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பெண்களை தவறாக சித்தரிக்கும் விளம்பரங்களை தடை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்! - பெண்களை தவறாக சித்தரிக்கும் விளம்பரங்களை தடை செய்யக் கோரி திருப்பூரில் ஆர்ப்பாட்டம்

திருப்பூர்: மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் , பெண்களை தவறாக சித்தரிக்கும் விளம்பரங்களை தடை செய்யக்கோரி தமிழ் தேசியக் கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசியக் கட்சியினர்
ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசியக் கட்சியினர்

By

Published : Feb 25, 2020, 12:40 PM IST

திருப்பூரில் செயல்பட்டு வரும் ப்ரித்வி, பூமர் உள்ளாடை நிறுவனங்களின் விளம்பரத்தில் பெண்களை போகப்பொருளாக தவறாக சித்தரிப்பதாகவும் குடும்பத்துடன் பார்க்க முடியாத அளவு ஆபாசமாக உள்ளதாகவும் தமிழ் தேசிய கட்சியினர் குற்றஞ்சாட்டுகின்றனர்.

மேலும், இந்த விளம்பரங்களைத் தடை செய்யக்கோரி திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தமிழ் தேசிய கட்சியினர் புகார் மனு அளித்தனர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய தமிழ் தேசியக் கட்சியினர்

இதுபோன்ற ஆபாச விளம்பரங்களைத் தடை செய்யக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்குத் தொடர உள்ளதாகவும் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி தமிழக வாழ்வுரிமை கண்டன ஆர்ப்பாட்டம்

ABOUT THE AUTHOR

...view details