தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

டெல்லி விவசாயிகள் போராட்டம்: தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆதரவு! - Tirupur district latest news

வேளாண் சட்டங்களுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்காக பாட்டு பாடியும், கை அச்சுக்களை பதித்தும் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் தங்களது ஆதரவை தெரிவித்தனர்.

Hand print support for farmers
Hand print support for farmers

By

Published : Dec 18, 2020, 10:51 PM IST

திருப்பூர்: வேளாண் சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூரில் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத்தினர் கை அச்சு பதித்து அவர்களது ஆதரவை தெரிவித்தனர்.

மத்திய அரசின் வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வலியுறுத்தி டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து 20 நாட்களுக்கு மேலாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில், அவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் திருப்பூர் குமரன் நினைவகம் முன்பாக தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர் சங்கத்தினர் விவசாயிகளை பாராட்டும் வகையில் பாட்டு பாடியும், கை அச்சுக்களை பதித்தும் தங்கள் ஆதரவை வெளிப்படுத்தினர்.

மேலும் விவசாயிகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்று வேளாண் சட்டத் திருத்த மசோதாவை திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் தேர்தல் பணிகளை கண்காணிக்கும் தேர்தல் ஆணைய குழு!

ABOUT THE AUTHOR

...view details