தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர் திடீர் போராட்டம்! - திருப்பூரில் தூய்மை பணியாளர் திடீர் போராட்டம்

திருப்பூர்: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஏஐடியுசி சுகாதார பணியாளர் சங்கத்தின் சார்பாக தூய்மைப் பணியாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

தூய்மை பணியாளர் திடீர் போராட்டம்
தூய்மை பணியாளர் திடீர் போராட்டம்

By

Published : Aug 18, 2020, 12:34 PM IST

இதில், சுகாதார பணியில் ஈடுபட்டு வரும் தினக்கூலி அடிப்படையிலான தொழிலாளர்களுக்கு குறைந்தபட்ச ஊதியமாக மாதம் 21 ஆயிரம் ரூபாய் வழங்கிட வேண்டும். மேலும் ஒப்பந்த பணியாளர்களை விரைவில் நிரந்தரப் பணியாளர்களாக மாற்றிட வேண்டும்.

அதேபோல் கரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளருக்கு அரசு அறிவித்த சிறப்பு ஊதியங்கள் உடனடியாக கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (18.08.20) பணிக்கு செல்லும் முன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையும் படிங்க:பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details