கரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளதால், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள் உள்பட அனைத்தும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, பெரும்பாலான குடும்பங்கள் அன்றாட தேவைகளுக்கே அரசை எதிர்பார்க்கும் சூழலில் உள்ளனன.
இதையடுத்து, பல தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள், தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பாதிக்கப்படும் மக்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களை வழங்கிவருகின்றனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு பொருள் உதவி இந்நிலையில் திருப்பூரில் சேவா பாரதி அமைப்பு மூலம் மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கணக்கிடப்பட்டு அவர்களுக்கு அரிசி, மளிகை பொருள்கள், காய்கறி அடங்கிய தொகுப்பு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது.
அதன்படி இன்று தேர்வு செய்யப்பட்ட மாற்றுத்திறனாளிகளின் குடும்பத்திடம் சேவா பாரதி அமைப்பினர் அரிசி உள்ளிட்ட மளிகை பொருள்களை வழங்கினர்.
இதையும் படிங்க: அத்தியாவசிய பொருள்கள் விநியோகிக்கும் காவல் துணை ஆணையர்!