இரண்டு வருடங்களுக்கு முன் பன்னிரண்டாம் வகுப்பு முடித்த மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்காமல், தற்போது பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கியதால் சில நாட்களுக்கு முன்பு கணினி வழங்கக்கோரி உடுமலை அரசு பள்ளி மாணவர்கள் போராட்டம் நடத்தினர். அப்போது 15 நாட்களில் கணினி வழங்க ஏற்பாடு செய்யப்படும் என்று உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். ஆனால், 15 நாட்கள் முடிந்தும் மாணவர்களுக்கு கணினி வழங்கவில்லை.
எப்போது வரும் மடிக்கணினி; மாணவர்கள் போராட்டம்! - போராட்டம்
திருப்பூர்: உடுமலை பகுதியில் பயிலும் அரசு பள்ளி மாணவர்கள் இலவச கணினி வழங்கக்கோரி இன்று உடுமலை பேருந்து நிலையம் முன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள்
இதனையடுத்து, மாணவர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், அதிகாரப்பூர்வமாக மடிக்கணினி வழங்க நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவோம் எனவும் தெரிவித்தனர்.
பின்னர், உடுமலை டிஎஸ்பி ஜெயச்சந்திரன், வட்டாட்சியர் தங்கவேலு ஆகியோர் மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி மடிக்கணினி வழங்க விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக உறுதியளித்த பின்னரே மாணவர்கள் கலைந்து சென்றனர்.