திருப்பூர்: தாராபுரம் சாலை, தெற்கு தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி. இவர் பஞ்சு விற்பனை செய்யும் இடைத்தரகராக உள்ளார். இவரது மகன் பிரகதீஸ் (6) மூன்றாம் வகுப்பு படித்துவருகிறார். இந்நிலையில் பிரகதீஸ் நேற்று (செப்.16) மாலை தனது வீட்டு வாசலில் விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது சுமார் ஐந்திற்கும் மேற்பட்ட தெரு நாய்கள் பிரகதீசை கடித்துக் குதறியுள்ளது.
இதனைக் கண்ட அருகிலிருந்தவர்கள், தெரு நாய்களைத் துரத்தியடித்து சிறுவனை திருப்பூர் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பிரகதீஸுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.