திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடையிலான கராத்தே போட்டி நடைபெற்றது. குழந்தைகளுக்கும் பெண்களுக்கும் எதிராக வன்முறைகள் நடந்து வரும் நிலையில், அவர்கள் தங்களைப் பாதுகாத்துக் கொள்வது மிக அவசியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.
உடுமலைப்பேட்டையில் மழலையருக்கான கராத்தே போட்டி
திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவ மாணவிகளுக்கு இடையிலான கராத்தே போட்டி நடைபெற்றது.
குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகளை அவர்களே எதிர் கொள்ள வேண்டுமென்றால் தற்காப்பு மிக அவசியமான ஒன்று. அதனடிப்படையில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களிடையே கராத்தே போட்டி நடைபெற்றது.
மாநில அளவிலானஇப்போட்டியில் ஐநூறுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். இப்போட்டிகளில், ஆண் குழந்தைகளுக்கு நிகராக பெண் குழந்தைகளின் பங்கேற்பு இருந்தது குறிப்பிடத்தக்கது. போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கம், சான்றிதழ் ஆகியவை வழங்கப்பட்டது. மேலும், இப்போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்கள் தேசிய அளவிலான போட்டிகளுக்கு தகுதி பெற்றுள்ளனர்.