திருப்பூர் மாவட்டம், அவினாசி அருகே தெய்வம்பாளையம் பகுதியில் லோகநாதன் என்பவரின் வீட்டு ஆட்டுக்குட்டி வேறு சமூகத்தினரின் தோட்டத்தில் மேய்ந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வேறு சமூகத்தினர், லோகநாதன் மற்றும் அவரது குடும்பத்தினரை, காலில் விழுந்து மன்னிப்புக் கேட்க வற்புறுத்தியுள்ளனர். அதனை மறுத்த லோகநாதன் குடும்பத்தினர், மீது சாதிய ரீதியிலான வன்கொடுமையில் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து அவினாசி காவல் நிலையத்தில் லோகநாதன் கொடுத்தப் புகாரின் மீது நடவடிக்கை எடுக்காத அவினாசி காவல் துறையினர், லோகநாதன் மீது வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.