தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வேலைக்கு போக சொன்ன தாயை கொன்ற மகன் கைது! - பூர்விக சொத்துக்கள்

திருப்பூர் : ஊர்சுற்ற பணம் தராமல், வேலைக்குப் போகுமாறு வற்புறுத்தியதால் கத்தியால் தாயை கொன்ற மகனை காவல் துறையினர் கைது செய்தனர்.

தாயை கொன்ற மகன் கைது.

By

Published : Sep 9, 2019, 11:39 PM IST

திருப்பூர் மாவட்டம், காசிபாளையம் பகுதியில் குடியிருந்துவருபவர் ஆரோக்கியமேரி (47). இவர், கணவனை இழந்து தனது மகன், இரண்டு மகளுடன் வசித்துவருகிறார். மூத்த மகளுக்கு திருமணம் முடிந்த நிலையில் அவரது இரண்டாவது மகன் அர்ஷத் (22) வேலைக்குச் செல்லாமல் வீட்டில் பணம் பெற்று ஊர்சுற்றி வந்துள்ளார்.

தாயை கொன்ற மகன் கைது

பூர்விக சொத்துக்கள், வாடகை பணம் மட்டுமே வருவாயாக உள்ள நிலையில் அர்ஷத்தை வேலைக்கு செல்ல ஆரோக்கிய மேரி வற்புறுத்தியுள்ளார். இந்நிலையில், அர்ஷத் பணம் கேட்டபோது ஆரோக்கிய மேரி பணம் தர மறுத்து, வேலைக்கு சென்று சம்பாதித்துக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்.

இதனால், ஆத்திரமடைந்த அர்ஷத் அருகில் இருந்த கத்தியை எடுத்து தனது தாயை சரமாரியாக குத்தி கொலை செய்துள்ளார். இதுகுறித்து, காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து விரைந்து வந்த காவல் துறையினர் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கேயே இருந்த அர்ஷத்தையும் கைது செய்தனர்.

ABOUT THE AUTHOR

...view details