தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகள் மீது நடவடிக்கை உத்தரவு: உயர்நீதிமன்றம்! - அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகள்

சென்னை: திருப்பூரில் அனுமதியின்றி செயல்படும் இறைச்சிக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க திருப்பூர் மாநகராட்சிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Shut down illegal slaughter house in thirupur district, MHC order
Shut down illegal slaughter house in thirupur district, MHC order

By

Published : Jun 11, 2021, 7:15 PM IST

திருப்பூர் மாவட்டம், இந்து முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் கோபிநாத் சென்னை உயர் நீதிமன்றத்தி பொது நல மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

அதில், "திருப்பூர் மாநகராட்சியிலுள்ள 368 இறைச்சிக் கடைகளில், 26 கடைகள் எந்த அனுமதியுமின்றி, ஊரடங்கு காலத்திலும் இயங்கி வருவதாகவும், அந்த கடைகளை மூட நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்" என கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு, மனுவில் குறிப்பிட்டுள்ள 26 கடைகள் மட்டுமல்லாமல், மாநகராட்சியில் அனுமதியின்றி செயல்படும் அனைத்து கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, திருப்பூர் மாநகராட்சிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மனுவுக்கு பதிலளிக்க தமிழ்நாடு அரசுக்கும், திருப்பூர் மாநகராட்சிக்கும் உத்தரவிட்டு, விசாரணையை நான்கு வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details