திருப்பூர் முதலிபாளையம் சிட்கோ பகுதியில் ஆண்டுதோறும் கிருஷ்ண ஜெயந்தி விழா 'விஸ்வ ஹிந்து பரிஷத்' அமைப்பின் சார்பில் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டு 23ஆம் தேதி வருகின்ற கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு சிலை வைப்பதற்காக விஸ்வ இந்து பரிஷத் சார்பில் அப்பகுதியில் வசூல் செய்யப்பட்டு வந்துள்ளது.
'நன்கொடை' தரமறுத்த வியாபாரிக்கு அடி; இந்து அமைப்பு அடாவடி!
திருப்பூர்: கிருஷ்ண சிலை வைப்பதற்கு நன்கொடை தர மறுத்த வியாபாரியை இந்து அமைப்பினர் தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், அதே பகுதியில் உள்ள சிவா என்பவருக்குச் சொந்தமான எலக்ட்ரிக்கல் கடையில் அவர்கள் வசூல் செய்ய வந்தபோது, 300 ரூபாய் பணத்தை நன்கொடையாக சிவா கொடுத்திருக்கிறார். அதனை வாங்க மறுத்த அவர்கள் 1000 ரூபாய் கேட்டு வற்புறுத்தியுள்ளனர். மேலும் தரமறுத்த சிவாவை அவரது மனைவி கண்முன்னே அடித்து, கொலைமிரட்டல் விடுத்துவிட்டுச் சென்றுள்ளனர்.
இதனால் மனமுடைந்த கடை உரிமையாளர் சிவா, தனது கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிளை ஆதாரமாகக் கொண்டு ஊத்துக்குளி காவல் நிலையத்தில் அளித்த புகாரையடுத்து காவல்துறையினர், விஸ்வ இந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட ஐந்து பேர் மீது நான்கு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.