திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக தேசிய கல்விக் கொள்கையை எதிர்த்து அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், இந்திய மாணவர் சங்கம் சார்பில் இன்று (ஆகஸ்ட் 19) ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் இதில் கலந்துகொண்டனர். தேசிய கல்விக் கொள்கையை தமிழ்நாடு அரசு முழுமையாக நிராகரிக்க வேண்டும் என்றும், தேசிய கல்விக் கொள்கையை அமல்படுத்த நினைக்கும் மத்திய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன.
புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் - புதிய கல்வி கொள்கை
திருப்பூர்: புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து திருப்பூர் ரயில் நிலையம் முன்பு இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
![புதிய கல்விக் கொள்கைக்கு எதிராக இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம் SFI protest](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-02:26:25:1597827385-tn-tpr-01-sfistudentprotest-vis-7204381-19082020121720-1908f-00740-694.jpg)
SFI protest
மேலும், தேசிய கல்விக் கொள்கையால் ஏழை, எளிய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கப்பட்டது. திருப்பூர் ரயில் நிலையம் முன்பாக நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன.