தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 17, 2020, 2:55 PM IST

ETV Bharat / state

இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டம்

திருப்பூர்: அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தை விளையாட்டு கழகம் இன்டோர் ஸ்டேடிய விரிவாக்கத்திற்கு கையகப்படுத்துவதை கண்டித்து இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Sfi protest in chikkanna government college
Sfi protest in chikkanna government college

திருப்பூர் கல்லூரி சாலையில் அமைந்துள்ள சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஏற்கனவே சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரியின் விளையாட்டு மைதானத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பில் இன்டோர் ஸ்டேடியம் அமைக்கப்பட்டுள்ள சூழ்நிலையில், மீண்டும் அதனை விரிவுபடுத்துவதற்காக மாவட்ட விளையாட்டு கழகம் சார்பில் 20 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், கல்லூரி மாணவர்களின் விளையாட்டு பயிற்சிக்காக உள்ள இடத்தை மீண்டும் ஆக்கிரமித்து இன்டோர் ஸ்டேடியம் விரிவுபடுத்துவதற்கு அனுமதிக்க மாட்டோம் என இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ABOUT THE AUTHOR

...view details