தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

பாலியல் இச்சைக்கு இசைந்துகொடுக்காத பெண்ணை கொன்றவர் கைது! - தோசைக் கல்லால் அடித்துக் கொலை

திருப்பூர்: பாலியல் இச்சைக்கு இசைந்துகொடுக்காத பெண் கட்டடத் தொழிலாளியை தோசைக் கல்லால் அடித்துக் கொன்றவர் கைதுசெய்யப்பட்டார்.

தோசைக் கல்லால் அடித்துக் கொன்றவர்
தோசைக் கல்லால் அடித்துக் கொன்றவர்

By

Published : Jun 4, 2020, 3:23 PM IST

கர்நாடக மாநிலம் மைசூர் பகுதியைச் சேர்ந்த தம்பதி வீரபத்திரன், லட்சுமி (50). லட்சுமி திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் தனியாக வாடகை வீட்டில் வசித்தபடி கட்டட வேலைக்குச் சென்றுவந்தார்.

இந்நிலையில் அதே பகுதியில் வசிக்கும் இளைஞர் பூபதி (22) கஞ்சா புகைத்தபடி தனியாக இருந்த லட்சுமியின் வீட்டுக்கள் புகுந்தார். பின்னர், தனது ஆசைக்கு இசையுமாறு லட்சுமியிடம் போதையில் இருந்த பூபதி வற்புறுத்தியுள்ளார்.

ஆனால் லட்சுமி பூபதியின் ஆசைக்கு இசைந்து கொடுக்கவில்லை. பூபதி மீது கோபமடைந்த லட்சுமி அவரைத் தாக்கினார். இதில் மூர்க்கமடைந்த பூபதி தோசைக்கல்லால் தொடர்ந்து லட்சுமியைத் தாக்கினார். திரும்ப திரும்ப தாக்கியதில் லட்சுமி ரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வந்து பார்க்கும்போது லட்சுமியின் உயிர் பிரிந்திருந்தது. இதையடுத்து காவல் துறைக்குத் தகவல் கொடுக்கப்பட்டது. பூபதியை லட்சுமி வீட்டிலேயே பொதுமக்கள் பிடித்துவைத்திருந்தனர். தகவலறிந்து விரைந்து வந்த காவல் துறையினர் பூபதியை கைதுசெய்தனர்.

இதையும் படிங்க: கட்டட தொழிலில் மலர்ந்த காதல்! தாய்மாமன் கைது!

ABOUT THE AUTHOR

...view details