திருப்பூர் மாவட்டம் பல்லடம் மங்கலம் சாலை நாரணாபுரத்தைச் சேர்ந்தவர் ரவி. இவருக்குச் சொந்தமான உணவகம் நாரணாபுரம் பேருந்துநிறுத்தம் அருகே உள்ளது. இதில் ஐந்து தொழிலாளர்கள் தங்கி வேலை செய்து வருகின்றனர். நேற்று இரவு வேலை முடிந்ததும் கடையைப் பூட்டிவிட்டு தொழிலாளர்கள் உள்ளேயே தூங்கியுள்ளனர்.
உணவகத்தில் தூக்கில் தொங்கிய தொழிலாளி - பல்லடம்
திருப்பூர்: பல்லடம் அருகே தனியார் உணவகத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் தொழிலாளி உடல் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
palladam
இந்நிலையில் இன்று அதிகாலை எழுந்த தொழிலாளர்கள், தங்களுடன் பணியாற்றிய நாகராஜ்(46), கடையின் மேற்கூரையில் தூக்கிய தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து போலீசார் நாகராஜின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.