தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்! - திருப்பூரில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்

திருப்பூர்: வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டது.

வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்!
வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி துவக்கம்!

By

Published : Mar 9, 2021, 2:44 PM IST

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில், திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும், வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிரித்து அனுப்பப்பட்டன. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் செவந்தாம்பாளையம் தெற்கு தாலுகா அலுவலகத்தில் சீலிடப்பட்ட அறையில், வைக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், திருப்பூர் மாவடட் மாவட்ட ஆட்சியர் விஜயகார்த்திகேயன், அனைத்து அரசியல் கட்சியினர் முன்னிலையில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் கணினி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு அனுப்பப்பட்டன. திருப்பூர் தெற்கு தாலுகா அலுவலகத்தில் இருந்து 4 ஆயிரத்து 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள் பல்லடம் , உடுமலை , மடத்துக்குளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு அனுப்பப்பட்டன.

ABOUT THE AUTHOR

...view details