தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மினி லாரியில் கடத்த முயன்ற 3 டன் ரேஷன் அரிசி பறிமுதல் - ஜோலார்பேட்டை

திருப்பத்தூர்: ஆந்திராவுக்கு மினி லாரியில் கடத்த முயன்ற மூன்று டன் இலவச ரேஷன் அரிசி பறிமுதல்செய்யப்பட்டது.

மினி லாரியில் கடத்த முயன்ற 3 டன் இலவச ரேஷன் அரிசி பறிமுதல்
மினி லாரியில் கடத்த முயன்ற 3 டன் இலவச ரேஷன் அரிசி பறிமுதல்

By

Published : Apr 29, 2021, 2:14 PM IST

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அருகே நியாயவிலைக் கடை அரிசி கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து, சிறப்பு உதவி ஆய்வாளர் இளியாஸ்கான் தலைமையில் தாமலேரிமுத்தூர் கிராமம் அருகில் வாகன சோதனை நடத்தப்பட்டது.

அப்போது, மினி லாரி ஒன்று நிற்காமல் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது. காவல் துறையினர் தொடர்ந்து பின்சென்று பச்சூர் சுங்கச்சாவடி அருகே மடக்கிப் பிடித்துள்ளனர்.

சோதனையில், ஜோலார்பேட்டை அடுத்த ராஜிவ் காந்தி நகர்ப் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ் (36) என்பவர் சுமார் 3 டன் இலவச ரேஷன் அரிசி மூட்டைகளைக் கள்ளத்தனமாக ஆந்திராவுக்கு கடத்த முயன்றது தெரியவந்தது.

இதனடிப்படையில் சுரேஷை பிடித்து காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றனர். இவரிடமிருந்து கைப்பற்றப்பட்ட மூன்று டன் அரிசியை வேலூர் நுகர்ப்பொருள் அலுவலத்தில் காவல் துறையினர் ஒப்படைத்தனர்.

இதையும் படிங்க: பெண்களுக்கு எதிரான தீரா வன்கொடுமை: அதிர்ச்சியளிக்கும் புள்ளி விவரம்!

ABOUT THE AUTHOR

...view details