தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

நான்காம் வகுப்பு மாணவனுக்கு சூடு வைத்த ஆசிரியை கைது

திருப்பூர்: பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் 4 ஆம் வகுப்பு பயிலும் மாணவனுக்கு மெழுகுவர்த்தி மூலம் சூடு வைத்த ஆசிரியரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆசிரியர் வைத்த சூடால் மாணவனின் கையில் ஏற்பட்டுள்ள காயம்

By

Published : Mar 27, 2019, 5:15 PM IST

திருப்பூர் மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையம் பகுதியில் வசித்து வரும் மனோகரன். ப்ரிண்டிங் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். அவரது மனைவி ரேவதி பனியன் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவர்களுக்கு தருண் (11), பரத் (9) என்ற இரண்டு மகன்கள் உள்ளனர்.

அவர்கள் இருவரும் அதேபகுதியில் அருகில் உள்ள தனியார் பள்ளியில் பயின்று வருகின்றனர். அதில் நான்காம் வகுப்பு பயிலும் பரத் நேற்று காலை கை வலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து சிறுவனின் கையை பார்த்த பெற்றோர் கையில் தீ காயம் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவன்

சிறுவனிடம் இது குறித்து விசாரித்த போது வீட்டு பாடத்தினை மாற்றி செய்ததால் பள்ளியில் ஆசிரியை ரம்யா மெழுகுவர்த்தி ஏற்றி தனது கையில் சூடு வைத்ததை தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட போலீசார் ஆசிரியை ரம்யாவை கைது செய்தனர். பின் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி அவரை கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details