தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

’பட்டா வேண்டும்’ - திருப்பூர் ஆட்சியரகத்தில் தூய்மைப் பணியாளர்கள் மனு! - sanitary workers petition

திருப்பூர்: தூய்மைப் பணியாளர்கள் தாங்கள் குடியிருந்துவரும் இடத்திற்குப் பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி இன்று (நவ. 30) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

தூய்மைப் பணியாளர்கள்
தூய்மைப் பணியாளர்கள்

By

Published : Nov 30, 2020, 6:15 PM IST

திருப்பூர் மாவட்டத்திற்குள்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளைச் சேர்ந்த 44 தூய்மைப் பணியாளர்களுக்கு, பல்லடம் சாலையில் உள்ள ஆதிதிராவிடர் காலனி குடியிருப்புப் பகுதியில் இடங்கள் வழங்கப்பட்டன. 73 ஆண்டுகளுக்கு முன்பு அங்கு இடம் வழங்கப்பட்டது.

அவர்கள் தற்போது அவ்விடத்தில் வீடு கட்டி வசித்துவருகின்றனர். இருப்பினும் இத்தனை ஆண்டுகள் கடந்தும் அவர்களுக்கு அங்கு பட்டா வழங்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அப்பகுதியில் தொடர்ந்து பணிகளைத் தொடர முடியவில்லை எனவும், உடனடியாகப் பணியாளர்களுக்கான இடத்திற்கு பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் சிலர் இன்று (நவ. 30) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளித்தனர்.

இதையும் படிங்க:செல்ஃபோன் பறித்துச் சென்றவரை துரத்திப் பிடித்து, குத்திக் கொன்ற இளைஞர்கள்!

ABOUT THE AUTHOR

...view details