தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா ஊரடங்கில் ரூ. 22 லட்சம் அபராதம் வசூல் - திருப்பூர் மாநகராட்சி - tiruppur latest news

ஊரடங்கு விதிமுறைகளை மீறியதாக கடந்த ஆறு மாதத்தில் ரூ. 22 லட்சத்து 28 ஆயிரம் பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருப்பூர் மாநகராட்சி
திருப்பூர் மாநகராட்சி

By

Published : Aug 22, 2021, 11:07 PM IST

திருப்பூர்: தமிழ்நாட்டில் கரோனா தொற்றுப் பரவலை தடுக்கும் வகையில், அரசால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறும் அனைத்து நிறுவனங்கள், பொதுமக்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் திருப்பூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில், ஊரடங்கு விதிமுறைகள் முறையாக கடைபிடிக்கப்படுகிறதா என குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட்டன.

அதன்படி திருப்பூர் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில், கடந்த மார்ச் 12ஆம் தேதி முதல் இன்று (ஆக.22) வரை ஊரடங்கு விதிமுறைகளை மீறி செயல்பட்ட ஆயிரத்து 588 நிறுவனங்களுக்கு, ரூ. 12 லட்சத்து 69 ஆயிரம் பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து முகக்கவசம் அணியாமல் வந்ததற்காக 4 ஆயிரத்து 740 பேருக்கு, ரூ. 9 லட்சத்து 59 ஆயிரத்து 400 பணம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஆக, கரோனா கட்டுப்பாட்டு நெறிமுறைகளை மீறியதற்காக மொத்தம் ரூ. 22 லட்சத்து 28 ஆயிரத்து 400 பணம் அபராதமாக வசூலிக்கபட்டுள்ளதாக மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:தமிழ்நாட்டில் புதிதாக 1,630 பேருக்குக் கரோனா

ABOUT THE AUTHOR

...view details