தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அதிமுக மாணவரணி செயலாளரின் தனியார் விடுதிக்கு குடியிருப்பு வரி!

திருப்பூர்: தனியார் தங்கும் விடுதிக்கு குடியிருப்பு என மாநகராட்சி அலுவலர்களால் வரி விதிக்கப்பட்டிருப்பது தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்
திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்

By

Published : Nov 27, 2019, 6:48 PM IST

திருப்பூர் அதிமுக மாவட்ட மாணவரணி செயலாளராக இருப்பவர் அன்பகம் திருப்பதி. இவருக்குச் சொந்தமான தங்கும் விடுதி மாநகராட்சி அருகே அமைந்துள்ளது. இந்த விடுதிக்கு மாநகராட்சி அலுவலர்கள் குடியிருப்பு என குறைந்த தொகையை வரியாக விதித்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர் ஒருவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக பெறப்பட்ட ஆவணங்கள் தற்பொழுது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வரும் நிலையில், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயனிடம் செய்தியாளர்கள் இதுபற்றி கேட்டனர்.

தனியார் தங்கும் விடுதி

அதற்கு அவர், இந்தத் தகவல் தற்பொழுதுதான் எனது கவனத்திற்கு வந்துள்ளது. இதுகுறித்து விசாரித்து உரிய முறையில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். மேலும் உடனடியாக இந்த சம்பவம் தொடர்பாக விசாரித்து நடவடிக்கை எடுக்குமாறு அலுவலர்களுக்கும் உத்தரவிட்டார்.

திருப்பூர் மாவட்ட ஆட்சியர் விஜய கார்த்திகேயன்

இதையும் படிங்க: ராமேஸ்வரம் தீவில் அரசு டாஸ்மாக் கடையை திறக்கக் கூடாது - நீதிமன்ற உத்தரவு!

ABOUT THE AUTHOR

...view details