திருப்பூர் மாவட்டம் அவிநாசி அருகேயுள்ள ஆலத்தூரில் தனியாருக்கு சொந்தமான நூற்பாலையில் குழந்தை தொழிலாளர்கள் அதிகமாக வேலை செய்து வருவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதனடிப்படையில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு துறையினர் அந்த நூற்பாலையில் ஜூலை 29ஆம் தேதி ஆய்வு செய்தனர்.
அப்போது அங்கு வேலை செய்து வந்த திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 27 பேர், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த மூன்று பேர், விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த இருவர், வேலூர், தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர், கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஒருவர் என 38 குழந்தை தொழிலாளர்களை மீட்டனர்.