தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

லாரி சக்கரத்தில் சிக்கி பெண் உயிரிழப்பு: நெஞ்சை பதைபதைக்க செய்யும் சிசிடிவி காட்சிகள்! - Bike Collides With Truck In Tiruppur

திருப்பூர்: இருசக்கர வாகனம் கீழே சாய்ந்து விழுந்து லாரியின் பின்பக்க சக்கரம் ஏறி இறங்கி பெண் உயிரிழந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Bike accident news  இருசக்கர வாகனம் லாரி மீது விபத்து  திருப்பூரில் இருசக்கர வாகன விபத்து  இருசக்கர வாகன விபத்து  Two-wheeler collides with truck  Tiruppur Bike Accident  Bike Collides With Truck In Tiruppur  Bike Accident CCTV Footages
Bike Accident CCTV Footages

By

Published : Feb 9, 2021, 4:42 PM IST

திருப்பூர் மாவட்டம், முருகம்பாளையம் பகுதியை சேர்ந்தவர்கள் வேலுச்சாமி, அருக்காணி தம்பதி. இவர்கள் இருவரும் நேற்று (பிப். 08) இரவு பணி முடித்துவிட்டு வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தனர். அப்போது, முருகம்பாளையம் கோடீஸ்வரர் சந்திப்பு அருகே முன்னால் சென்று கொண்டிருந்த லாரியை இடதுபுறமாக கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனம் வலது புறமாக சாய்ந்ததில் அருகில் சென்று கொண்டிருந்த லாரியின் பின் சக்கரத்தில் இருவரும் விழுந்த நிலையில் அருக்காணி மேல் லாரியின் பின் சக்கரம் ஏறி இறங்கியது.

விபத்து சிசிடிவி காட்சி

இதில், அருக்காணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வீரபாண்டி காவல் துறையினர் வேலுச்சாமியை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் லாரி ஓட்டுநர் மாடசாமி என்பவரை கைது செய்து, அப்பகுதியில் பொருத்தப்படடிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:வேகமாக வந்த பேருந்தின் டயரில் சிக்கிய முதியவர் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details