கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது. அதிவேகமாகப் பரவிவரும் இந்த வைரஸ் தொற்றைக் கண்டறிந்து, இதனால் பாதிக்கப்பட்டவர்களைத் தனிமைப்படுத்தி மருத்துவ சிகிச்சை அளிக்க ஏதுவாக அனைத்து மாவட்டத்திற்கும் தமிழ்நாடு அரசு ரேபிட் சோதனைக் கருவியை வழங்கியுள்ளது.
அதன்படி, திருப்பூர் மாவட்டத்திற்கு என இரண்டாயிரத்து 400 ரேபிட் சோதனைக் கருவி வழங்கப்பட்டுள்ளது. இந்த ரேபிட் சோதனைக் கருவி மூலம் கரோனா வைரஸ் குறித்த பரிசோதனை மேற்கொள்ளும் பணியை மாநில கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் தொடங்கிவைத்தார்.