ராம்ராஜ் நிறுவனம் சார்பில் வருடந்தோறும் ஜனவரி 1ஆம் தேதி முதல் 7ஆம் தேதி வரை வேட்டி தினம் கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு புதிய வகையிலான வேட்டி சட்டையை அறிமுகம் செய்துள்ளது.
திருப்பூரில் செய்தியாளர்களிடம் பேசிய ராமராஜ் நிறுவனத்தின் நிறுவனர் நாகராஜ் ”26 முதல் 32 அளவுகளில் அட்ஜஸ்ட் செய்யக்கூடிய ஒட்டிக்கோ கட்டிக்கோ வேட்டி மற்றும் வேட்டியின் பார்டர் நிறத்தில் கலர் சட்டை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.