திருப்பூர் தனியார் மண்டபத்தில் காந்திய மக்கள் இயக்கத்தின் தலைவர் தமிழருவி மணியன் எழுதிய "ஒரு வழிப்போக்கனின் வாழ்க்கைப் பயணம்" என்ற புத்தகம் வெளியிடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், “திமுக, அதிமுகவிற்கு அரசியல் தான் தொழில் என்பதால் இங்குதான் பணத்தைத் திரட்டுவார்கள். ஆனால், ரஜினிகாந்த் தொழில் வேறு என்பதால் பணத்தைத் திரட்டுவது அவர் நோக்கம் கிடையாது. அனைத்துக் கட்சிகளும் ஊழலில் ஈடுபடுவதால் இதற்கு மாற்றம் தேவை, என்னுடைய கருத்தும் ரஜினிகாந்தின் கருத்தும் ஒன்று என்பதால் அவரை ஆதரிக்கிறேன்” என்றார்.