திருப்பூர் ரயில் நிலைய தண்டவாளத்தை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் கடக்க முயன்றுள்ளார். அப்போது, அந்த வழியே ரயில் ஒன்று அவர் மீது மோதியது.
திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழப்பு! - person deadbody in railway track
திருப்பூர்: ரயில்வே தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் மீது ரயில் மோதிய விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
![திருப்பூரில் தண்டவாளத்தைக் கடக்க முயன்ற நபர் ரயில் மோதி உயிரிழப்பு!](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-4253356-thumbnail-3x2-trail.jpg)
தண்டவாளத்தை கடந்த நபர் பலி
இதில், அவரது உடல் இரண்டு துண்டுகளாகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதைப் பார்த்த அப்பகுதியினர் ரயில்வே காவல் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ரயில்வே காவல்துறையினர் உடலை மீட்டு உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
தண்டவாளத்தை கடக்க முயன்ற நபர் ரயில் மோதி பலி
பின்னர் இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்து இறந்தவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Last Updated : Aug 27, 2019, 12:38 PM IST