திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவல்கத்தின் முதல் தளத்தில் உள்ள 129, 130ஆவது அறையில் காவல் உதவி ஆணையர் அலுவலகம் அமைந்துள்ளது.
தீபாவளி பண்டிகை நேரம் என்பதால் மதுபான கூடங்கள், விடுதி உள்ளிட்டவற்றிலிருந்து தீபாவளி அன்பளிப்பாக பணமோ, பரிசுப்பொருள்களோ கையூட்டாக வழங்கப்படலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் காவல் உதவி ஆணையர் அலுவலகத்தில் திடீர் ஆய்வை மேற்கொண்டனர்.