தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

வெறிநாய்கள் கடித்து ஆடுகள் பலி: விவசாயிகள் வேதனை - 15 goats worth one lakh

திருப்பூர்: தாராபுரம் அருகே விவசாய தோட்டத்துக்குள் புகுந்த வெறிநாய்கள் கடித்து ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள செம்மறி ஆடுகள் பலியாகின.

goats death
goats death

By

Published : Jul 21, 2020, 10:02 AM IST

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகேயுள்ள கோவில்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி சிவப்பிரகாசம். இவர் தனது விவசாய தோட்டத்தில் குடும்ப வருமானத்திற்காக 26 செம்மறி ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று (ஜூன் 20) மாலை வழக்கம்போல மேய்ச்சல் முடிந்து வந்த ஆடுகளை பட்டியில் அடைத்து வைத்துவிட்டு வீட்டிற்கு சென்றிருந்தார்.

உயிரிழந்து கிடக்கும் ஆடுகள்

இந்நிலையில், இன்று (ஜூன் 21) காலை வழக்கம் போல் ஆட்டுப் பட்டிக்கு வந்த பார்த்தபோது, பட்டியில் அடைக்கப்பட்டிருந்த 26 ஆடுகளில் 15 ஆடுகள் குடல் சரிந்து ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்தன. ஆட்டுப்பட்டியை சுற்றிலும் பார்த்தபோது வெறிநாய்கள் கூட்டமாக ஓடியதைக் கண்டு சிவப்பிரகாசமும், அவரது மனைவி சரஸ்வதியும் அதிர்ச்சியடைந்தனர். மேலும், ரத்தக் காயத்துடன் கிடந்த ஐந்து ஆடுகளை மீட்டு சிகிச்சையளிக்கப்பட்டது. உயிரிழந்த 15 ஆடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விவசாயிகள் வேதனை

தாராபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயத்திற்கு தேவையான பருவமழை பெய்யாததால் இப்பகுதி விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக கால்நடை வளர்ப்பு மட்டுமே இருந்து வருகிறது. இங்கு ஆண்டுக்கு குறைந்தபட்சம் ஆயிரம் ஆடுகளாவது வெறி நாய்களால் வேட்டையாடப்படுகிறது. வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் விவசாயிகளுக்கு இழப்பீடு அல்லது, ஆடுகளை கொன்று குவித்து வரும் வெறி நாய்களை பிடித்து கொல்ல வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை வைக்கின்றனர்.

இதையும் படிங்க:மத்தியப் பிரதேச ஆளுநர் லால்ஜி டாண்டன் மறைவு

ABOUT THE AUTHOR

...view details