திருப்பூர் மாநகராட்சி 18வது வார்டுக்குட்பட்ட, வாவிபாளையம் பகுதியில் மூவாயிரத்திற்க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் அப்பகுதிக்கு செல்லும் சாலை அருகே திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் புதிதாக அரசு மதுபான கடை அமைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்! - அரசு மதுபானக் கடை
திருப்பூர்: வாவிபாளையம் அருகே திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் புதிதாக அரசு மதுபானக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Public protest against setting up of Tasmac store
இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள், மதுபானக்கடை அமைக்கப்பட்டால் பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக மாறுவதோடு, வழிப்பறி உள்ளிட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது. எனவே புதிதாக அமைய உள்ள அரசு மதுபானக்கடையை திறக்கும் முயற்சியை டாஸ்மாக் நிர்வாகம் கைவிடக்கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க:பாலியல் தொழிலில் ஈடுபட வற்புறுத்தல்; திருநங்கைகள் தற்கொலை முயற்சி