திருப்பூர் மாவட்டம், மங்கலம் நான்குரோட்டில், நேற்றிரவு இந்து மக்கள் கூட்டமைப்பு சார்பில் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துப் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். அதே நேரத்தில் அங்கு, குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக இஸ்லாமியர்கள் தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.
இருதப்பினரும் ஒரே சாலையில் சென்றுவருவதால் வாக்குவாதம் எழுந்ததுள்ளது. மேலும் அங்கு கூட்டம் அதிகரித்ததால் போக்குவரத்துப் பாதிப்பும் ஏற்பட்டுள்ளது. அதனால், பதற்றமான சூழ்நிலை ஏற்பட்ட காரணத்தால், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.