தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கரோனா: விசைத்தறி ஜவுளி உற்பத்தி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நிறுத்தம் - திருப்பூரில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை

திருப்பூர்: கரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று முதல் ஏப்ரல் 5ஆம் தேதி வரை விசைத்தறி ஜவுளி உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

விசைத்தறி ஜவுளி உற்பத்தி
விசைத்தறி ஜவுளி உற்பத்தி

By

Published : Mar 21, 2020, 12:08 PM IST

உலகின் பல்வேறு பகுதிகளிலும் கரோனா வைரஸ் தொடர்ந்து பரவிவரும் நிலையில், இந்தியாவில் கரோனா வைரஸ் பரவலை தடுக்கும் விதமாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு அரசும், பொதுமக்கள் அதிகம் கூடும் பகுதி மற்றும் பெரு நிறுவனங்களுக்கு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, தொழிலாளர்களுக்கு கரோனா தொற்று பரவுவதை தடுக்கும் பொருட்டு, திருப்பூர் பல்லடம், அவிநாசி, சோமனூர் பகுதியில் இருக்கக்கூடிய ஜவுளி உற்பத்தியாளர் சங்கத்தின் கூட்டம் நடைபெற்றது.

விசைத்தறி ஜவுளி உற்பத்தி ஏப்ரல் 5ஆம் தேதி வரை நிறுத்தம்

இதில், நான்கு சங்கங்களின் ஜவுளி உற்பத்தியாளர்கள் கலந்துகொண்டு கரோனா வைரஸ் தாக்கத்தின் பரவலை தடுக்கும் விதமாக ஏப்ரல் 5ஆம் தேதி வரை ஜவுளி உற்பத்தியை முழுமையாக நிறுத்துவது என்று ஏகமனதாக தீர்மானித்துள்ளனர்.

இதையும் படிங்க:மார்ச் 22இல் பால் விநியோகம் நிறுத்தம்!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details