தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மோடி மலை, ராகுல் மடு: பிரேமலதா கடும் தாக்கு

சென்னை: பல்லடத்தில் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை நிகழ்த்திய தேமுதிக பொருளாளர் பிரேமலதா, மோடி மலை ராகுல் மடு எனக்கூறி கடுமையாக விமர்சித்தார்.

மோடி மலை

By

Published : Mar 27, 2019, 11:40 PM IST

நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் பொதுமக்களிடையே பரப்புரை செய்தார்.

அப்போது அவர் பேசுகையில், 'கோவை நாடாளுமன்ற வேட்பாளர் ராதாகிருஷ்ணனை, மூன்று லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்ய வேண்டும்.

மோடி மீது பண மதிப்பிழப்பு, ஜிஎஸ்டி, 84 முறை வெளிநாடு சென்றது ஆகிய மூன்று குற்றச்சாட்டுகளை மட்டுமே கூறிவருகின்றனர். ஆனால் காங்கிரஸ், திமுக ஆட்சியில் 2ஜி, காமன்வெல்த் என ஏராளமான ஊழல்கள் இருந்தது. இது ஒட்டுமொத்த இந்தியாவிற்கே தலைகுனிவு.

இந்த கூட்டணி வெற்றி பெற்றவுடன் நாங்கள் டெல்லிக்கு சென்று நெசவாளர்களின் பிரச்னையை எடுத்துரைத்து ஜிஎஸ்டி மீது மாற்றம் கொண்டுவர பாடுபடுவோம். மேலும் நதிகள் இணைப்புக்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்வோம். நாட்டை காக்கக்கூடிய பிரதமர்தான் நமக்கு வேண்டும்.

எதிர்க்கட்சியால் பிரதமர் வேட்பாளர் யார் என்று கூட சொல்ல முடியவில்லை. அவர்கள் ராகுல் காந்தியை நிறுத்தினால், அவரை பிரதமரோடு ஒப்பிடமுடியுமா?மோடி மலை- ராகுல் மடு.

காங்கிரஸ் ஆட்சியில் பேர் சொல்லும் அளவுக்கு எந்த திட்டமும் இல்லை. மாறாக ஊழல்தான் இருந்தது. தமிழ்நாட்டில் திமுகவும், கம்யூனிஸ்ட் கட்சியும் கூட்டணி. ஆனால் கேரளாவில் இருவரும் எதிரிகள்.

இந்த கூட்டணி இந்த தேர்தலோடு நின்று விடாது. இனி வரும், உள்ளாட்சி, சட்டப்பேரவை என அனைத்து தேர்தல்களிலும் தொடரும். எப்படி எம்ஜிஆர் என்றால் எல்லாருக்கும் தெரியுமோ அதுபோல கோவை நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஆர் என்றால் எல்லாருக்கும் தெரியும்' என்றார்.

ABOUT THE AUTHOR

...view details