குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லியில் நடைபெற்ற கலவரத்தின்போது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் டெல்லி மாநில நிர்வாகிகள், இஸ்லாமிய இளைஞர்களை அம்மாநில காவல்துறையினர் கைது செய்தனர். இதைக் கண்டித்து, நாடு முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
அதன் ஒரு பகுதியாக, திருப்பூர் மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக மாநகராட்சி அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.