திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே மைவாடி ஊராட்சியில் மைவாடி, நரசிங்கபுரம் தூய்மைப் பணியாளர்கள் உள்பட 500-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு நிவாரணப் பொருள்கள் வழங்கப்பட்டன.
இதில், சட்டப்பேரவைத் துணைத் தலைவர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு நிவாரணப் பொருள்களை வழங்கினார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கரோனா நிவாரணப் பணிகளில் முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகளால், பொதுமக்களிடம் முதலமைச்சருக்கு ஆதரவு பெருகிவருகிறது.