தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கி வரக் கூடிய சூழ்நிலையில் அதிமுகவில் திருப்பூர் வடக்கு, தெற்கு, காங்கேயம் தொகுதிகளை உள்ளடக்கிய புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் நியமிக்கப்பட்டுள்ளார்.
அதிமுகவின் திருப்பூர் மாவட்டச் செயலாளராக பொள்ளாச்சி ஜெயராமன் பொறுப்பேற்பு! - சட்டப்பேரவை தேர்தல் 2021
திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அதிமுகவின் புதிய மாவட்டச் செயலாளராக சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
இதனையடுத்து இன்று (நவ.19) திருப்பூர் காங்கேயம் சாலையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பதவியேற்பு விழா நடைபெற்றது. திருப்பூர் மாவட்டத்தில் கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைப் போல மாவட்டத்தின் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றிபெற அனைவரும் ஒருங்கிணைந்து உழைத்திட வேண்டும் என மாவட்ட செயலாளராகப் பொறுப்பேற்றுக் கொண்ட சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் சட்டப்பேரவை உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.